பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 4 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

கடற்படையின் தகவலுக்கமைய, அந்தப் படகில் கண்டெடுக்கப்பட்ட ஆறு பைகளில் அடைக்கப்பட்டிருந்த 150 ஹெரோயின் பொட்டலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இலங்கையின் தென்கடலில் நடத்தப்பட்ட விசேட கடற்படை நடவடிக்கையின் போது, ​​பல நாள் மீன்பிடிப் படகும், நான்கு சந்தேக நபர்களும் இடைமறிக்கப்பட்டு இன்று காலை டிக்கோவிட்ட துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here