பிக் பாஸ்

பிக் பாஸ் 8 சமீபத்தில் துவங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இரண்டு வாரங்களை பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்துள்ள நிலையில், தற்போது 16 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கிறார்கள்.

மக்கள் இடையே அதிகம் வரவேற்பை பெரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் படங்களின் ப்ரோமோஷனுக்காக அவ்வப்போது திரையுலக பிரபலங்கள் வருகை தந்துள்ளனர்.

சிவகார்த்திகேயன்

இந்த நிலையில், தற்போது அமரன் படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். ஆம், பிக் பாஸ் 8ல் தனது அமரன் படத்தை ப்ரோமோட் செய்ய உள்ள வந்த சிவகார்த்திகேயன், போட்டியாளர்களிடம் படம் குறித்து பேசி, ட்ரைலரை பார்த்து, கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சிவகார்த்திகேயனின் என்ட்ரி அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. மேலும் அமரன் படம் வெற்றியடைய போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here