ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் வளர்ந்துவரும் வீரர்களுக்கான 6வது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இலங்கை A அணி இன்றைய தினம் பாகிஸ்தான் A அணியை எதிர்கொள்கிறது.

கடந்த 18ஆம் திகதி முதல் ஓமானில் நடைபெற்றுவரும் குறித்த தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் இன்றைய தினம் ஆரம்பமாகின்றன. 8 அணிகள் குறித்த தொடரில் இலங்கை A அணி குழுவில் இடம்பெற்றிருந்தது.

தங்களது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்த இலங்கை A அணி அடுத்து ஹொங்காங், பங்களாதேஷ் A அணிகளுடனான ஆட்டத்தில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து அரையிறுதிக்கு சென்றது.

அதன்படி குழு B யில் இரண்டாமிடம் பிடித்த பாகிஸ்தானை A அணி இலங்கை A அணி இன்று பி.ப 2.30 மணிக்கு ஆரம்பமாகும் அரையிறுதி ஆட்டத்தில் எதிர்கொள்கிறது.

இதேவேளை இன்று இரவு நடைபெறும் 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய A ஆப்கானிஸ்தான் A அணிகள் மோதுகின்றன .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here