அடிக்கடி உங்கள் கனவில் பறவைகள் வருதா? அதிலும் புறாக்கள் கனவில் வந்தால் என்ன பலன் எனப் பார்ப்போம்.

பறவைகள் நம் கனவில் வந்தால் தற்போதுள்ள சூழ்நிலை விரைவில் மாறும் என கூறுவார்கள். ஆனால், சில நேரங்களில் பறவைகளின் செயல்பாடுகளை வைத்தும் அதற்கான பலன்கள் கூறப்படுகின்றன.

எது நல்ல பலன்களைக் கொடுக்கும்?

மயில் பறப்பது போலவும் தோகையை விரித்தாடுவது போலவும் கனவு கண்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். ஆந்தைகள் கூட்டத்தைக் கண்டால் நன்மை. கருங்குயிலைக் கனவில் கண்டால் நல்லது

குருவிகள் ஜோடியாக இருப்பதைக் கனவில் கண்டால் நல்ல செய்தி கேள்விப்படும்.

பறந்துகொண்டிருக்கும் புறாவைப் பிடிப்பதைப் போல் கனவு வந்தால் நண்பர்கள் வட்டம் வலுவாகும்.

வெள்ளைப் புறாவைக் கனவில் கண்டால் இடமாற்றம், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

புறாவைப் பிடிப்பதைப் போல் கனவு கண்டால் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கொக்கு கனவில் வந்தால் விவசாயம் செழிக்கும்.

கெட்ட பலன்கள்

ஒரு ஆந்தையைக் கனவில் காண்பது நல்லதல்ல. குயில்கள் சண்டையிடுவதைப் போல் கனவில் வரக்கூடாது.

கருங்குயில் கனவில் வருவது கெட்டது நடக்கப் போவதைக் குறிக்கும். குருவிக்கூட்டை கலைப்பதைப் போல் கனவில் வந்தால் கெட்ட செய்தி கேள்விப்படும்.

பிணம் திண்ணும் கழுகை கனவில் காணவே கூடாது. புறாக் கூட்டத்தை காணக்கூடாது. வேடன் புறாவைப் பிடிப்பதுபோல் கனவு கண்டால் கெடுதல் ஏற்படும்.

கறுப்பு நிற புறாவைக் கனவில் காணக்கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here