அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு சருமத் தொற்றுநோய் படர்தாமரை. இரு டெர்மடோஃபைட் (Dermatophyte) எனும் கிருமியால் உருவாகிறது.
ஆரம்பத்தில் சாதாரணமான எறும்புக் கடிபோல் இருக்கும். பின்னர் அரிப்பு ஏற்படும், சொரிய சொரிய வட்டமாக அல்லது நீள் வட்டமாக ஒரு அடையாளமாக மாறிவிடும்.
பின்னர் உடல் முழுவதும் பரவி எரிச்சலையும் அரிப்பையும் ஏற்படுத்தும். இவையெல்லாம் நடந்த பின்னர்தான் தெரியும் நமக்கு படர்தாமரை எனம் சரும நோய் ஏற்பட்டுள்ளது என்று.
ஆரம்பத்தில் அருகிலிருக்கும் மருந்தகங்களில் அலர்ஜி எனக் கூறி மருந்துகளை வாங்கி உட்கொண்டு, க்ரீம்களை பூசுகிறோம்.
குணமாவதைப் போல் தெரிந்தாலும் மீண்டும் மீண்டும் வந்து பரவும், புண்ணாகும்.
பிரச்சினை என்னவென்றால் தொற்று தீவரமடைந்ததன் பின்னரே தோல் மருத்துவரை அணுகுகிறோம்.
தொற்று தீவிரமாவதால் பின்விளைவுகள் மோசமாவதுடன் அதனைக் குணப்படுத்தவும் நீண்ட காலம் செல்கிறது.
எதனால் ஏற்படுகிறது?
அதிக வியர்வை மற்றும் இறுக்கமான ஆடை அணிதல், அதிக நேரம் தண்ணீரில் இருத்தல், உள்ளாடைகளை ஈரத்துடன் அணிதல், ஆடைகளை ஒழுங்காக வெயிலில் உலர்த்தாமல் அணிதல், தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்தும் பரவலாம்.
எப்படி இருக்கும்?
சிறு சிவப்பு புள்ளியாக வட்ட வடிவில் இருந்து பின் பெரிதாகும். இதன் ஓரங்களில் செதில்கள் காணப்படும். ஓரங்கள் தடித்தும் இருக்கும். தொற்று தீவிரமாகும்போது சிறிய சீழ் கொப்புளங்களும் காணப்படும்.
எந்தெந்த இடங்களில் பரவும்?
தொடை, பிறப்புறுப்பு பகுதி, அக்குள், கால் நகங்களில் பரவும். வியர்வை அதிகம் தங்கும் அனைத்து இடங்களிலும் பரவும்.
எப்படி தடுப்பது?
உடனடியாக தோல் மருத்துவரை நாட வேண்டும்.
உடைகளை நன்றாக வெயிலில் உலர வைத்து அணிய வேண்டும்.
முடிந்தவரை பருத்தி ஆடைகளை அணிதல்.
சவர்க்காரம், டவல் உள்ளிட்டவற்றை தனித் தனியாக பயன்படுத்துதல்.
இரண்டு வேளை குளிக்க வேண்டும்.








