தேர்தல் பிரசார வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது தேர்தல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பொலிஸாருக்கு அறிவித்ததன் பின்னர், தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவுள்ளதாக தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மூன்று ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது பிரச்சார வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறியுள்ளனர்.

இந்த வேட்பாளர்கள் வணக்கத்துக்குரிய பத்தரமுல்லே சீலரதன தேரர், சரத் கீர்த்திரத்ன மற்றும் அரியநேத்திரன் பாக்கியசெல்வம் ஆகும்.

ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது பிரச்சார வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்பிப்பதற்கான காலக்கெடு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைந்தது.

தேர்தல் சட்டத்தின்படி, ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 21 நாட்களுக்குள் தங்களது வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here