பிரபல அமெரிக்க ராப் பாடகர் ஃபேட்மேன் ஸ்கூப் தனது 53 ஆவது வயதில் காலமானார்.
ஹாம்டனில் நடந்த இசை நிகழ்ச்சியின் போது அவர் திடீரென மேடையில் மயக்கமுற்று விழுந்தார்.
இதனையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இரங்கல் வெளியிட்டுள்ளனர்.








