இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்பான நபர்கள் மீது பிரித்தானியா தடைகளை விதித்துள்ளது.

இதில் முன்னாள் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா மற்றும் விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோர் அடங்குவர்.

இதன்படி இவர்கள் பிரித்தானியாவிற்கு பயணம் செய்வது, சொத்துக்களைக் குவிப்பது அல்லது பிரித்தானியாவில் சொத்துக்களை வைத்திருப்பது போன்றவற்றிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here