பயங்கரவாத செயற்பாடுகளுக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டில் பிரித்தானியக் குடியுரிமை பெற்ற இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு – வடக்கு குற்றப் பிரிவினரால் கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பெறப்பட்ட பயணத்தடை உத்தரவுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய குறித்த நபர், 2009 ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறி, பிரித்தானியக் குடியுரிமை பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அங்கிருந்து பயங்கரவாத செயற்பாடுகளுக்காகப் பணம் சேகரித்ததாகக் கூறப்படும் அவர், நாடு திரும்பி கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் நிதியை விநியோகித்துள்ளதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.








