கொஸ்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹா இந்துருவ புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள புகையிரத கடவையில் இன்று (19) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் கொஸ்கொடவில் இருந்து விறகு ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதாக பொலிஸாரினால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் லொறியில் பயணித்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இந்துருவ பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மற்றைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here