வாரியபொல – வாகொல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த பெண்ணொருவர் வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

வாகொல்ல பண்டாரகொஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரும், சந்தேகநபரும் அரச காணி ஒன்றில் 02 வீடுகளில் வசித்து வந்ததாகவும், அவர்களது வீடுகளுக்குச் செல்லும் வழியில் விழுந்த மரத்தின் கிளைகளை அகற்றும் போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சந்தேகநபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் அதே பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here