இலங்கையில் பெரும்பான்மையான சிறுபான்மை சமூகத்தின் ஆதரவு தனக்கு இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை அரசியல் கட்சிகளின் சில தலைவர்கள் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கலாம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மை சமூகங்களின் ஆதரவு குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க, எவ்வாறாயினும், அந்த சமூகங்களுக்குள்ளேயே பெரும்பான்மையினரின் ஆதரவு தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இனம், மதம் அல்லது சாதி பிரச்சினைகளில் இருந்து விலகி பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட ஜனாதிபதித் தேர்தலை நேரில் கண்டமை குறித்து ஜனாதிபதி மேலும் தனது பெருமையை வெளிப்படுத்தினார்.

பொருளாதார சீர்திருத்தங்களுடன், நாட்டின் சமூக அமைப்புகளும் முன்னேற்றத்தைத் தக்கவைக்க குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு நிபுணத்துவ மன்றம் திங்கட்கிழமை (செப் 02) ஏற்பாடு செய்திருந்த  “எதையும் என்னிடம் கேளுங்கள்” சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here