நாவலமுல்ல – மீகொடை வீதியில் சிரிமெதுரவத்த பிரதேசத்தில் பேருந்தின் சில்லுக்குள் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று புதன்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.
மீகொடதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் மற்றுமொரு நபருடன் சேர்ந்து தனியார் பேருந்து ஒன்றில் ஏறுவதற்கு முயன்ற போது பேருந்தின் மிதிபலகையிலிருந்து தவறி விழுந்து சில்லுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், விபத்தினை ஏற்படுத்திய குறித்த பேருந்தின் சாரதி வேகமாக செலுத்தி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.








