ஆறு பிரதி பொலிஸ்மா அதிபர்கள் (DIG) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர், இது தேசிய பொலிஸ் ஆணையகத்தின் அனுமதிக்கு உட்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அரச புலனாய்வு சேவையின் பிரதி பொலிஸ் அத்தியட்சகராக (DIG) ஆக பணியாற்றிய H.K.R. பெர்னாண்டோ, பொலிஸ் விசேட பிரிவின் பொறுப்பான DIG ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், பொலிஸ் நலன்புரி பிரிவின் DIG ஆக பணியாற்றிய W.U. கினிகே, மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்திற்கு தலைமை தாங்கிய K.A.J. கொடித்துவக்கு, பொலிஸ் நலன்புரி பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கேகாலை பிரிவு பிரதி பொலிஸ் அத்தியட்சகர் DIG ஓஷன் ஹேவாவிதாரண யாழ்ப்பாணம் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் பிரிவு டி.ஐ.ஜி G.H. மரபன களுத்துறை பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை பிரிவின் பொறுப்பு DIG ஆக பணியாற்றிய W.J. பத்மினி, கேகாலை பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த இடமாற்றங்கள் பொலிஸ்மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரியவால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here