இலங்கை அஞ்சல் சேவை நாட்டின் வரலாற்றையும் எதிர்காலத்தையும் இணைக்கும் முக்கிய ஊடகமாக மாற்றப்படும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்நோக்கின் ஒரு பகுதியாக, பொலன்னறுவை புதிய பிரதான அஞ்சல் அலுவலகம் இன்று (17) அமைச்சர் தலைமையில் பொதுமக்களுக்குத் திறந்து வைக்கப்பட்டது. இதன் போது, முத்திரை கௌண்டர் திறப்பு மற்றும் முதல் பரிவர்த்தனையும் இடம்பெற்றது.

அண்மையில் இடிக்கப்பட்ட பழைய கட்டிடத்திற்குப் பதிலாக, ரூ. 69 மில்லியன் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த தபால் நிலையம் 12 தபால் நிலையங்கள் மற்றும் 91 பிரதி நிலையங்களை உள்ளடக்கியது.

இலங்கை அஞ்சல் சேவை நவீன மற்றும் பல்துறை சேவைகளை வழங்கும் நிறுவனமாக மாற்றப்படும், நாட்டின் 4,000 அஞ்சல் நிலையங்கள் மற்றும் 22,000 ஊழியர்கள் இந்த இலக்கை எட்ட பங்களிக்க வேண்டும், 1300 மில்லியன் ரூபாய் அரசாங்கம் ஒதுக்கியுள்ளது, தற்போதைய தபால் சேவையை இலாபகரமான, நவீன தொழில்நுட்பம் கொண்ட நிறுவனமாக மாற்றப்படும். என பல முக்கிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டும் திட்டம்: “பிபிதெமு பொலன்னறுவை” திட்டத்தின் கீழ் 2017 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்டுமானம், 2024 இல் முழுமை பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் நகர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் டி.பி. சரத், தபால் மா அதிபர் ருவன் சத்குமார, பொலன்னறுவை மாவட்ட செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தபால் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here