பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற லோகார்னோ திரைப்பட விழாவில் வித்தியாசமான பெயர் கொண்ட விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

Pardo Alla Carriera Ascona-Locarno Tourism என்பதே அந்த விருதின் பெயராகும்.

58 வயதான ஷாருக் இந்தப் பெருமையைப் பெறும் முதலாவது இந்தியர் ஆவார்.

8,000 பேர் கூடியிருந்த Piazza Grande பியாஸ்ஸா கிராண்டே சதுக்கத்தில் இந்த விருது வழங்கப்பட்டது.

இதன்போது நகைச்சுவையாக பேசிய ஷாருக் தனக்கு இந்த விருதின் பெயரை சரியாக உச்சரிக்க முடியவில்லை என குறிப்பிட்டு, நிகழ்ச்சியின் தொகுப்பாளினியிடம் அதனை கூறும் படி தெரிவித்தார். ஆயினும் அதன் மொழி பெயர்ப்பை அவர் இவ்வாறு கூறினார்.

மனிதகுல வரலாற்றில் உலகிலேயே மிகவும் அற்புதமான சிறுத்தை விருது என்பதே அதன் பொருளாகும்

சினிமாவில் அவரது மாறுபட்ட பாத்திரங்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் அவரது 2002 ஆம் ஆண்டு வெளியான “தேவதாஸ்” திரைப்படம் திரையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here