கற்பிட்டி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கு பொருட்களை வைக்கும் அறையிலிருந்து பூச்சிகொல்லி மருந்துகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதவான் நீதிமன்றம் நேற்று (27.09) உத்தரவிட்டுள்ளது.

கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் கற்பிட்டி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த போது வழக்கு பொருட்களை வைக்கும் அறையிலிருந்து பூச்சிகொல்லி மருந்துகளைத் திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நேற்று (27.09) புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here