ஹபரணை – திருகோணமலை வீதியின் கல் ஓயா சோதனைச் சாவடியில் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர் டிப்பர் ரக வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் பொலிஸ் பரிசோதகர், லொறி மற்றும் கார் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் பொலிஸ் பரிசோதகர் படுகாயமடைந்த நிலையில் ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

காரில் இருந்த ஒரு பெண் மற்றும் நான்கு மாத கைக்குழந்தை, மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் லொறியின் சாரதி ஆகியோர் ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் கந்தளே பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் எனவும் இவ்விபத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here