கடந்த இரண்டு நாட்களில் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் உந்துருளிகள் உட்பட 100 ற்கும் மேற்பட்ட வாகனங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

பண்டாரகம, கிதேல்பிடிய பகுதியில் அதிக திறன் கொண்ட 4 உந்துருளிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 21 முதல் 23 வயதுக்குட்பட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டனர்.

மேலும் அத்துருகிரிய மற்றும் கல்கிஸ்ஸ காவல்துறை பிரிவுகளில் மதுபோதையில் வாகனம் செலுத்திய ஓட்டுநர்களின் உந்துருளிகள், கார்கள் ஆகியன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன.

இதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here