யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், நேற்றைய தினம் (18) திங்கட்கிழமை பொலிஸார் மோப்ப நாய் சகிதம் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த வேளை , அவ்வீதியூடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை மறித்து சோதனையிட்ட போது ,அவர்களிடம் போதைப்பொருள் இருப்பதனை மோப்ப நாய் அடையாளம் காட்டி கொடுத்தமையால் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் சிறு தொகை போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அதனை அடுத்து இருவரையும் கைது செய்த பொலிஸார் அவர்களை பொலிஸ் நிலையம் அழைத்து சென்று தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here