பெல்லன்வில பகுதியில் 3 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் மலேசிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
24 வயதுடைய குறித்த பெண் போதைப்பொருளை விற்பனை செய்ய முற்பட்ட வேளையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொக்கெய்ன் போதைப் பொருள் சிறிய மாத்திரை குளுசைகளில் நிரப்பப்பட்டு இனிப்பு பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவற்றின் மொத்த பெறுமதி 11 கோடி ரூபாய் என பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கங்கொடவில நீதவான் நீதிமன்றில் பெற்றுக்கொள்ளப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் குறித்த பெண்ணிடம் மேலதிக விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.








