கண்டி, கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாரங்விட பிரதேசத்தில் மகாவலி கங்கையில் மிதந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் 65 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் இவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமானது பிரேதப் பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here