துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக உறுப்பினர்களை நியமித்தார்.
உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்கள் இன்று (13) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்படி, துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ அமரசேகர நியமிக்கப்பட்டதுடன், டேமியன் அமல் கப்ரால், மொஹான் ரே அபேவர்தன, சஞ்சய குலதுங்க மற்றும் ஹர்ஷ சுபசிங்க ஆகியோர் ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.








