போலி இலக்க தகட்டுன் காணப்பட்ட சொகுசு கார் ஒன்று தெல்லிப்பழை பொலிஸாரால் நேற்றையதினம் மீட்கப்பட்டது.
மேற்படி வாகனம் சுன்னாகம் பகுதியில் மறைத்து வைத்திருந்த நிலையில் தெல்லிப்பழை பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலில் அடிப்படையில் நேற்று (21/10/2024) மீட்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி கார் குற்றச்செயல்களுக்கு அல்லது போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








