மத்துகம, அம்பருல்லகஹவத்த பகுதியில் தந்தை மற்றும் மகன் மீது, பிறிதொரு குழவொன்று மேற்கொண்ட வாள்வெட்டுத் தாக்குதலில் மகன் உயிரிழந்தார்.

நேற்று (11) இரவு இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த் தகராறு மோதலாக மாறியதைத் தொடர்ந்து குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த தந்தையும் மகனும் களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மகன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் யடிதொல, நவுத்துடுவ பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என்றும், காயமடைந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தையின் சகோதரருடன் நபரொருவர் மதுபான விருந்தொன்றின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இரு தரப்பினரும் அங்கிருந்து வெளியேறிச் சென்றுள்ளனர்.

பின்னர், சம்பவத்தின் அடிப்படையில் மேற்கூறிய பகுதியில் மற்றொரு வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன்போது, மகனும் தந்தையும் தகராறில் தலையிட்டுள்ளனர், மேலும் தகராறில் ஈடுபட்ட மற்றொரு நபர் கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

பின்னர் பிரதேச மக்கள் காயமடைந்தவர்களை களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில், மகன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவத்திற்குப் பின்னர் சந்தேக நபர் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றத்தில் ஈடுபட்ட சந்தேக நபரைக் கைது செய்ய மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here