இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA)புதிய தலைவராக சுரஞ்ஜித் வேவிட நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராகவும் பணியாற்றும் அவர், வங்கித் துறையின் அனைத்து பிரிவுகளிலும் 20 ஆண்டுகளுக்கும் மேலான சேவை அனுபவம் உள்ளவர் ஆவார்.
அவர் 2013 ஆம் ஆண்டில் மத்திய மாகாணத்தின் சிறந்த பால் சார்ந்த துணை உற்பத்தி தொழில்முனைவோராகவும் மதிப்பிடப்பட்டுள்ளார்.
கேகாலை புனித மரியா கல்லூரியின் பழைய மாணவரான சுரஞ்ஜித் வேவிட, உரிமம் பெற்ற சுற்றுலா வழிகாட்டி விரிவுரையாளர் உட்பட பல துறைகளில் அனுபவம் கொண்டவராவார்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக பணியாற்றிய புத்திக ஹேவாவசம், தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியான காரணங்களால் நேற்று (17) தனது பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்திற்காக இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.
அவர் தனது ராஜினாமாவை வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








