மன்னார் வடக்கு கடலில் அனர்த்தத்திற்குள்ளான மீன்பிடி படகில் இருந்த இரண்டு மீனவர்களை கடற்படையினர் இன்று (21) அதிகாலை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் குருநகர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 19ஆம் திகதி இரண்டு மீனவர்களுடன் சென்ற மீன்பிடி படகு மீண்டும் மீன்பிடி துறைமுகத்திற்கு வரவில்லை எனவும் அந்த படகை தேடுவதற்கு கடற்படையின் உதவியை வழங்குமாறும் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தால் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிவிப்பின் பேரில் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தால் அந்த கடல் பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் படகுகளுக்கு இது தொடர்பில் அறிவிக்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக வடக்கு மற்றும் வடமத்திய கடற்படை கட்டளைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அதன்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது தலைமன்னாருக்கு வடக்கே கடலில் எரிபொருள் இன்றி செயலிழந்து மிதந்து கொண்டிருந்த இந்த படகை கண்டுபிடிக்க முடிந்துள்ளது.

அங்கு படகில் இருந்த இரண்டு மீனவர்களும் மீட்கப்பட்டுள்ளதுடன் அவர்களையும் குறித்த படகையும் தலைமன்னாருக்கு வரவழைத்து தேவையான மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here