மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின்சார உற்பத்தித் திட்டத்திற்கு எதிராக, இன்று (செப்டம்பர் 29) மன்னாரில் நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதன்கீழ், இன்று முற்பகல் 10.00 மணியிலிருந்து மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து கண்டன பேரணி இடம்பெறுகின்றது என மன்னார் பிரஜைகள் குழு ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது.
பேரணியின் இறுதியில், திட்டத்திற்கு எதிரான கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஜனாதிபதிக்கு அனுப்புவதற்காக, மாவட்ட அரசாங்க அதிபருக்கு கையளிக்கவுள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வடமராட்சி கிழக்கு – வெற்றிலைக்கேணி பகுதியில், இதே திட்டத்திற்கு எதிராக அமைதிப்பூர்வமான வழிப் போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
மன்னாரில் நடை பெறும் இந்த நிர்வாக முடக்கல் போராட்டம், குறித்த மின்சார திட்டத்துக்கு எதிராக மக்களிடையே உருவாகி வரும் விரோத உணர்வுகளை பிரதிபலிக்கிறது.








