நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகக் கொழும்பு  மாவட்டத்தில் 59 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக  மாநகர சபையின் காணி மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி பணிப்பாளர் பொறியியலாளர் மனோஜ் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் அவற்றில் 19 மரம் முறிந்து வீழ்ந்த சம்பவங்கள் கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாகப் பல பிரதேசங்களில் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு முறிந்து வீழ்ந்த மரங்களை அகற்றுவதற்கான பணிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here