மொரட்டுவை ராவதாவத்தை பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை (13) காலை பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ்ஸானது மரமொன்றின் மீது மோதி பின்னர் வீதியின் இடது பக்கமாக திரும்பி முன்னால் இருந்த இரும்பு கம்பியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் யாருக்கும் பெரிதளவில் காயங்கள் ஏற்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here