மறைந்த நவ சமய கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணரட்னவின் நினைவு தினம் நேற்றைய தினம் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது மறைந்த தலைவரின் திருவுருவப்படத்திற்கு பொது மக்களால் மற்றும் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தினால் சுடரேற்றி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுதுரை ஐங்கரன்நேசன் அவர்களால் பொதுத் தேர்தல் தொடர்பிலும் தமிழ் மக்களின் உரிமைக்காக தொடர்ந்தும் கொள்கை தவறாது குரல் கொடுத்த விக்ரமபாகு கருணரட்னா தொடர்பிலும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
ஜனாதிபதியின் யாழ் வருகை அது தொடர்பான விடயங்களும் பேசப்பட்டன.
மேலும் தமிழ் தேசிய செயற்பாட்டாளர் செல்வன் இரேனியஸ் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் தொடர்பான ஆதரவு தொடர்பிலும் தேசிய இன பிரச்சனை தொடர்பிலும் சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பாக உரையாற்றினார்.
அத்துடன் நவ சம சமயக் கட்சியின் பொதுச் செயலரும் ரணத் குமார சிங்கவும் உரையாற்றினார்.








