இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் அஞ்சலி செலுத்தினார்.

நேற்று முன் தினம், சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்றிரவு உயிரிழந்திருந்த நிலையில், வைத்தியசாலையின் நிருவாக நடைமுறைகளைப் பின்பற்றி இன்று அதிகாலை அவரது பூதவுடலைப் பொறுப்பேற்ற சிறீதரன் எம்.பி, மாவிட்டபுரத்தில் உள்ள இல்லத்தில் வைத்து, கட்சியின் மூத்த தலைவரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த மாவை.சோ.சேனாதிராஜாவின் பூதவுடல், அரசடி வீதி, மாவிட்டபுரம், தெல்லிப்பழையிலுள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 2025.02.02, ஞாயிற்றுக்கிழமை பி.ப.3.00 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here