மியன்மார் நில அதிர்வை அடுத்து காணாமல் போனவர்களை மீட்கும் நடவடிக்கைகளுக்காக சீனா மீட்பு குழுவொன்றை அனுப்பியுள்ளது.
இந்த மீட்பு குழுவில் வைத்தியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, 37 பேர் கொண்ட சீன மீட்பு குழு இன்று (3/29/2025) மியன்மாரை சென்றடையவுள்ளது.
மியன்மாருக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு சீனா தயாராகவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை உணவு , போர்வைகள் , மருந்து , மின்பிறப்பாக்கி என 15 டன் நிவாரண பொருட்களை இந்தியா மியன்மாரில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அனுப்பியுள்ளது.








