ஹபராதுவ ஹோட்டலுக்குப் பின்புறம் உள்ள கடற்கரைப் பகுதியில் 37 வயதுடைய நபர் ஒருவர் நேற்று வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஹபராதுவ, மிஹிரிபென்ன பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் பின்புறம் உள்ள கடற்கரை பகுதியில் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தல்பே வெலேகொரட்டுவ பிரதேசத்தில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here