உலகெங்கிலும் பல நாடுகளில் மீண்டும் பரவி வரும் புதிய கோவிட் வைரஸ் குறித்து தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (27) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்
நாட்டில் இன்னும் ஆபத்தான சூழ்நிலை இல்லை என்றாலும், விமான நிலையப் பகுதியில் ஏற்கனவே தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.
சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் சில தகவல்கள் வந்துள்ளன. நாங்கள் அதை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம் என்றும் இலங்கைக்கு மிக நெருக்கமான நாடான இந்தியாவில் இருந்து புதிய கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட 1,009 நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், இந்த நோயால் 4 பேர் இறந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டன.








