ஜனாதிபதி அனுர யாழ் வருகையும் அதன் போது அவர் ஆற்றிய உரையில் வடக்கில் மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் பேசினார். இந்திய மீனவர்களுடனான பிரச்சினை பற்றி மாத்திரம் பேசிவிட்டுச் சென்றுள்ளார்.

யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அ.அன்னராசா இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது எமக்கு கவலையளிக்கிறது, தேர்தலுக்கு முன் உங்களது தேசிய மக்கள் சக்தி மீனவர்களது பிரச்சினை தொடர்பில் அதிகமாக பேசியது, ஆனால் யாழில் வந்து இந்திய மீனவர்களது பிரச்சினை மாத்திரமே உள்ளது போல பேசிவிட்டுச் சென்றுள்ளீர்கள்.

இங்குள்ள உள்ளூர் மீன்பிடியில் பல சட்டவிரோத தடைசெய்யப்பட்ட தொழில்கள் நடைமுறையில் உள்ளது. அதனை தீர்ப்பதாக தேர்தலின் முன் பேசினீர்கள். ஜனாதிபதியாகிய பின் உங்களது நிலைப்பாடு வேறாகவுள்ளது.

தடைசெய்யப்பட்ட தொழில்களால் கடல் மாசடைந்து போகிறது. இது பற்றி பேச மறுப்பது ஏன்? இந்திய மீனவர்களின் பிரிச்சினை மட்டுமே இருப்பதாக காட்டி சீனாவிடமிருந்து உதவிகளைப் பெறுவதே உங்கள் நோக்கமாகவுள்ளது போல் நாம் சந்தேகிக்கிறோம் என்றார்.

[யாழ் நிருபர்விஜய்குமார் லோஜன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here