ரெட்ரோ

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் நேற்று வெளிவந்த திரைப்படம்

இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க, Stone Bench Creations மற்றும் 2D Entertainment நிறுவனங்கள் சேர்ந்து தயாரித்து இருந்தது.

பூஜா ஹெக்டே முதல் முறையாக சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. எதிர்பார்ப்பை முழுமையாக இப்படம் பூர்த்தி செய்யவில்லை என்பதே பலருடைய கருத்தாக உள்ளது.

முதல் நாள் வசூல்

இந்த நிலையில், முதல் நாள் உலகளவில் ரெட்ரோ படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here