கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அவர், நேற்று மாலை நுகேகொடை மேலதிக நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்படி அவரை எதிர்வரும், ஏழாம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலக்க தகடு அற்ற சொகுசு ரக வாகனம் மிரிஹானை பகுதியிலுள்ள முன்னாள் அமைச்சரின் மனைவிக்குச் சொந்தமான வீட்டிலிருந்து கடந்த 26 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பில் கங்கொடவில நீதவான் நீதிமன்றில் மிரிஹானை காவல்துறையினர் சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

இதனையடுத்து, அந்த சொகுசு ரக வாகனம் காவல்துறையால் பொறுப்பேற்கப்பட்டது.

அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here