Thursday, June 11, 2026
No menu items!

லொஹான் ரத்வத்த

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார். உடல் நலக் குறைவினால் கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று (15) காலமானதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமது 57ஆவது வயதில் காலமானார்.  

பிணையில் விடுவிக்கப்பட்டார் லொஹான் ரத்வத்த..!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (09.12.2024) ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னரே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்படுத்தியமை மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கடந்த 6ஆம் திகதி கொள்ளுப்பிட்டி...

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட லொஹான் ரத்வத்த..!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று (09.12.2024) காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டார் லொஹான் ரத்வத்த..!

குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இன்று (07.12.2024) விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அவரை வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 லொஹான் ரத்வத்த மீண்டும் கைது..!

மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளுப்பிட்டிய காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளுப்பிட்டிய சந்தியில் அவர் செலுத்திய டிபென்டர் ரக வாகனம் எதிர்த்திசையில் பயணித்த மகிழுந்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் குறித்த விபத்து...

லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு பிணை..!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஷஷி பிரபா ரத்வத்த ஆகியோருக்கு நுகேகொட நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (05.12.2024) பிணை வழங்கப்பட்டுள்ளது.

லொஹான் ரத்வத்த தாக்கல் செய்த மனுவுக்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய சட்டமா அதிபருக்கு இன்று கால அவகாசம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்த தாக்கல் செய்த மனுவுக்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (19) சட்டமா அதிபருக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர்...

லொஹான் ரத்வத்தவின் மனைவி விளக்கமறியலில்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி மிரிஹானவில் உள்ள அவரது வீட்டில் பதிவு செய்யப்படாத சொகுசு வாகனம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நவம்பர் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நுகேகொட நீதவான் ருவினி ஜயவர்தனவினால் அவர் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

போலி இலக்கத் தகடுடன் லொஹான் ரத்வத்தவின் மற்றுமொரு ஜீப் வண்டி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பயன்படுத்தியதாகக் கூறப்படும் போலி இலக்கத் தகடுடன் கூடிய ஜீப் வண்டி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. தெல்தெனிய காவல்துறையினர் இதனைக் கைப்பற்றியுள்ளனர். தெல்தெனிய காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெல்தெனிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதேவேளை சட்டவிரோதமான முறையில் சொகுசு ரக மகிழுந்தை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது!

கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அவர், நேற்று மாலை நுகேகொடை மேலதிக நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்படி அவரை எதிர்வரும், ஏழாம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலக்க தகடு அற்ற சொகுசு ரக வாகனம் மிரிஹானை பகுதியிலுள்ள முன்னாள் அமைச்சரின் மனைவிக்குச் சொந்தமான வீட்டிலிருந்து கடந்த...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img