பொது நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படும் திகதி குறித்து வைத்தியர்கள் இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

விக்ரமசிங்கவின் சட்டக் குழு, அவருக்கான பிணை கோரிக்கையை முன்னிறுத்தி நீதிமன்றத்தில் பல விசேட சமர்ப்பணங்களைச் செய்திருந்தது. அந்த நிலையிலே, அவரது இதயத்தில் உள்ள நான்கு முக்கிய தமனிகளில் மூன்று அடைபட்டிருந்ததுடன், இதய திசுக்களின் இறப்பு மற்றும் நுரையீரல் தொற்று ஏற்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

மேலும், முன்னாள் ஜனாதிபதி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜா பிரேமரத்னவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here