பண்டாரவளை , தர்ம விஜய மாவத்தையின் பழைய வணிக வளாகத்தில் அமைந்துள்ள சதோச வணிக மையத்தில் இன்று (20) அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்தினால் சதோச நிலையம் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக பண்டாரவளை காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதன்போது பண்டாரவளை காவல்துறையினர் மற்றும் நகர சபையினரும் இணைந்து தீயை கட்டுப்படுத்தியதுடன் , தீ ஏனைய கடைகளுக்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்விபத்தில் ஏற்பட்ட சேதம் இன்னும் கணக்கிடப்படவில்லை எனவும் ,தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பண்டாரவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here