கொடகவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெல்மடுல்ல – நோனாகல வீதியில் மல்வத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொடகவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரத்தினபுரி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த தனியார் பஸ் ஒன்றுடன் மோதி கவிழ்ந்து பின்புறத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் கொடகவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரத்தினபுரி, கஹவத்தை பகுதியில் வசிக்கும் 40 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரது சடலம் கொடகவெல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடகவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








