கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டேன் (CCPI) மூலம் வருதத்தின் அடிப்படையில் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதமானது, 2026 மே மாதத்தில் 5.5% ஆக அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பதிவான 5.4% என்ற அளவிலிருந்து இது ஒரு அதிகரிப்பாகும் என மக்கள்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே , உணவுப் பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் பதிவான 2.8% உடன் ஒப்பிடுகையில், மே மாதத்தில் 0.9% ஆகக் குறைந்துள்ளது.
எனினும், உணவு அல்லாத பொருட்களின் பணவீக்கமானது, ஏப்ரல் மாதத்தில் 6.8% ஆகவிருந்த நிலையில் மே மாதத்தில் 7.8% ஆக அதிகரித்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.
இதற்கமைய ஒட்டுமொத்த பணவீக்க விகிதமானது, 2026 மே மாதத்தில் 5.5% ஆக அதிகரித்துள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.








