மொனராகலை மாவட்ட பொலிஸ் பிரிவிலுள்ள அம்பாறை பிபிலை வீதியிலுள்ள  கராண்டுகல உப பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் துசிரகுமார சம்பவதினமான சனிக்கிழமை இரவு கடமையை பெறுப்பேற்று கடமையாற்றிவந்துள்ளார்.

இந்த நிலையில் அதிகாலையில் தனது ரி.56 ரகதுப்பாக்கியுடன் பொலிஸ் நிலையத்தில் இருந்து ஒருவருக்கும் தெரியாமல் மோட்டார் சைக்கிளில் வெளியேறி அவருடன் கடமையாற்றி வந்த நாமல் ஓயா பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் லஹிரு உதார வீட்டிற்கு சென்று அவரை வீட்டில் இருந்து வெளியே அழைத்து அவர் மீது துப்பாக்கி சூட்டை நடாத்தி அவரை கொன்றுள்ளார்.

இதனை தொடர்ந்து அங்கிருந்து வெளியேறி நாமல் ஓயாவில் இருந்து 3 கிலோமீற்றர் தூரம் கொண்ட நெல்லிகலை என்ற பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றினுள் சென்று அங்கிருந்த 54 வயதுடைய பெண் ஒருவரையும் அவரது 17 வயதுடைய மகளையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு அங்கிருந்து வெளியேறி மீண்டும் பொலிஸ் நிலையத்துக்கு சென்று தனக்கு தானே அந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த இரு சம்பவத்தையடுத்து அந்தபகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுன் துப்பாக்கி சூடு நடாத்திய பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் உயிரிழந்த கான்ஸ்டபிளுக்கும் இடையே ஏற்பட்ட குரோதம் காரணமாகவும் ,அதேவேளை காணிபிரச்சினை காரணமாக இரு பெண்களையும் சுட்டுக் கொன்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இது தொடர்பாக மொனராகலை மாவட்ட பொலிஸ் மேலதிக விசாரணைகளைமேற்கொண்டுவருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here