இலங்கை வந்த பாரதப் பிரதமர் மோடியின் விஜயம் இலங்கை கடலில் அத்து மீறி உள் நுழையும் இந்திய மீனவர்களை ஊக்கப்படுத்தும் விஜயமாக அமைந்துள்ளதாக யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய பிரதமர் இலங்கை வருவதை இட்டு வடக்கு மீனவ சமூகம் எதிர்பார்ப்புக்களின் மத்தியில் இருந்த நிலையில் அந்த எதிர்பார்ப்பு மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பிரதமர் மோடி இருந்தவேளை இந்திய அத்துமீறிய இழுவை படகுகள் எமது கடற்பரப்புக்குள் உள் நுழைந்து எமது வளங்களை அபகரித்துக் கொண்டு சென்றனர்.

இந்த செயல் நான் இருக்கிறேன் நீங்கள் வாருங்கள் ஒன்றும் செய்ய முடியாது என இந்திய மீனவர்களை பிரதமர் மோடி ஊக்கப்படுத்தும் செயற்பாடாகவே நாங்கள் பார்க்கிறோம்.

அது மட்டும் அல்ல அது இலங்கை சிறையில் இருந்த மீனவர்கள் பத்துக்கு மேற்பட்டவர்கள் நல்லெண்ண அடிப்படை எனக் கூறி இந்திய பிரதமர் இலங்கையில் நிக்கும் போதே விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை சட்ட திட்டங்களுக்கு முரணான வகையில் எமது இறமையை கேள்விக்கு உட்படுத்தும் வகையில் அத்துமீறி இலங்கை கடற்பரப்புகள் நுழைந்த இந்திய மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையான கூறி விடுவிக்கப்பட்டமை இலங்கை அரசாங்கம் எமது மீனவ சமூகத்தின் துன்பங்களை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்துகிறது.

மீனவர்களை விடுவித்துவிட்டு அவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடி இலங்கை அரசாங்கத்திற்கு கூறியிருப்பதாக நாங்கள் அறிகிறோம் அதனையும் விரைவில் விடுவிப்பார்கள்.

மேலும் இலங்கையில் இருந்தவாறு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இந்திய பிரதமர் மோடி இராமேஸ்வரத்துக்கு சென்று அங்குள்ள மீனவர்கள் உரையாற்றிய விடையம் இந்திய சட்ட விரோத அத்துமீறிய மீன்பிடியை ஊக்குவிப்பதாகவே நாங்கள் கருதுகிறோம் என்றார்.

[யாழ் நிருபர்விஜய்குமார் லோஜன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here