கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் லியனகேமுல்ல பகுதியில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவரும் இரண்டு சிறுவர்களும் காயமடைந்துள்ளதாக  சீதுவை பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றே இவ்வாறு செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த பெண்ணும் இரண்டு சிறுவர்களும் காயமடைந்துள்ள நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்தில் முதுகடுவ, மாரவில பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here