மோட்டார் சைக்கிள் – துவிச்சக்கர வண்டி விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (16) புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.
காவல்பட்டாங்கட்டி, புதுக்குடியிருப்பு, பேசாலை பகுதியைச் சேர்ந்த 74 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் கடந்த 2ஆம் திகதி பேசாலை – மன்னார் வீதியால் தனது வீட்டை நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் மன்னார் – பேசாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் மூன்றாம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.







