வவுணதீவு பாலைக்காடு வயல் பிரதேசத்தில் வேளாண்மைக்கு நீர் பாச்ச சென்ற விவசாயி ஒருவர் யானை தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (01/05/2025) திகதி இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

நாவற்காடு மஞ்சுகட்மைச் சேர்ந்த 70 வயதுடைய வைரமுத்து மகாலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த விவசாயி வழமைபோல வேளாண்மைக்கு நீர் பாச்சுவதற்காக சம்பவதினம் இரவு சென்றவர் காலையாகியும் வீடு திரும்பிவராத நிலையில் உறவினர்கள் அவரை தேடிச் சென்ற போது அவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிந்த நிலையில் கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு அறிவித்தனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

[யாழ் நிருபர்விஜய்குமார் லோஜன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here