யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் இணையக் குற்றவிசாரணைப் பிரிவு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடக்குமாகாணத்தில் இணையக் குற்றங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வந்தன. இதனால், இணையக் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைப்பதற்காகக் கொழும்புக்குச் செல்லவேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது.

எனவே, இந்த விடயம் தொடர்பில் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே, யாழ்ப்பாணத்தில் இணையக் குற்றவிசாரணைப் பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

[யாழ் நிருபர்விஜய்குமார் லோஜன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here