நாடளாவிய ரீதியில், கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று (25.11.2024) ஆரம்பமாகியது. இன்றையதினம் ஆரம்பமாகும் பரீட்சை எதிர்வரும் 20 ஆம் திகதிவரை 2 ஆயிரத்து 312 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

இந்தமுறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 3 இலட்சத்து 32 ஆயிரத்து 183 பரீட்சார்த்திகள் தோற்றும் நிலையில், வடக்கு மாகாணத்திலிருந்து 17 ஆயிரத்து 212 மாணவர்கள் தோற்றுகின்றனர்.

அந்தவகையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி, யாழ்ப்பாண கல்லூரி மற்றும் விக்டோரியா கல்லூரி ஆகிய பாடசாலைகளில் அமைக்கப்பெற்றுள்ள பரீட்சை நிலையங்களிலும் பரீட்சை ஆரம்பமாகியது. மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சையில் கலந்துகொள்வதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here